சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

0 308
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் பக்கவாட்டு கட்டையில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒய் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டுக் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சிறுகாயங்களுடன் உயிர்த் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.