திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (வயது 63) இவரது மருமகள் ரேணுகாதேவி (வயது 31). இருவரது கணவரும் இறந்து விட்ட நிலையில் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன்; வெளியில் படுத்திருந்தனர். பின்னர் அதிகாலை எழுந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பின்பக்க கதவுகள் திறந்திருந்ததுடன் அறையில் இருந்த பிரோக்கள் திறக்கப்பட்டிருந்து அதில் இருந்த துணிகள் கலைந்து கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்த போது பிரோவில் இருந்த ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 2 ½ சவரன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது வீட்டின் பின்பகுதியில் கதவை திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பணம் மற்றும் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் உக்கிரத்தால் வீட்டிற்கு வெளியில் காற்றோட்டத்திற்காக படுத்தவர்களின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.