மணப்பாறையில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாத்திமாலை பகுதியில் தீயணைப்பு துறைக்கு நிலைய அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலைய குடியிருப்பு ஆகியவை கட்டி முடிக்கப்பட்டதை அடுத்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ அப்துல் சமது ரிப்பன் வெட்டி தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
அதன்பின்னர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றுவர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி அந்த பகுதியை பார்வையிட்டனர். இதில் மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ், போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.