நம்பர் 1 டோல்கேட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருச்சி, மார்ச் 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் ஏஐடியுசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்க கோடைக்கால தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. நம்பர் 1 டோல்கேட் பகுதி பிரதான சந்திப்பு பகுதியாகும். இங்கிருந்து லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, முசிறி, நாமக்கல், சேலம், பெங்களூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பிரதான சந்திப்பு பகுதியாக உள்ளது.
மேலும் அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது. பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஏஐடியூசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் நேற்று திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுகவின் வடக்கு மாவட்ட தலைவர் அம்பிகாபதி, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில், தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஏஐடியுசி நிர்வாகிகள் பிரபாகரன், சந்தோஷ், விசிக ஒன்றிய செயலாளர் ஏகவலைவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக ஏஐடியுசி நிர்வாகி முகமது நன்றி கூறினார்.