புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற கோரி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

0 202
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜ் சிலை அருகில் திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் ஏஐடியூசி சங்கம்  சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விபத்து நடந்தால் ரூ.10 லட்சம் அபராதம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற கொடுமையான புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெட்ரோல், கேஸ் ,டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். வீடில்லாத தொழிலாளர்களுக்கு வீட்டுமனை, வீடு கட்ட நிதி ரூ.4 லட்சம் நிதிவழங்க வேண்டும். சாலை வரியினை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிடு கைவிட வேண்டும். 60வயது நிறைவடைந்த ஆட்டோ தொழிலாளிக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். ஆட்டோ செயலியை தமிழக அரசை உருவாக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார். மணப்பாறை தாலுகா அமைப்புச்சாரா சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் நல்லுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சாதிக் எம்.ஜீ மதுரை சாலை சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், தியகராஜன், பூமிநாதன், ஜாகீர், சதாம், செங்குட்டுவன், மணிகண்டன், ராஜா, ஜெமினி, தந்தை பெரியர் சிலை ஆட்டோ சங்க நிர்வாகிகள் ராஜா, பசீர், ராஜலிங்கம், மணிகண்டன், பாஸ்கர், முருகனந்தம், குமார், திருச்சி சாலை பாண்டியன் பக்ரூதீன், ராமகிருஷ்ணன், உமர்காத்தர், ஜாகீர், சந்துரு, கணேசன், மணி, வாகித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.