மணப்பாறையில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு கண்மருத்துவ முகாம்

0 334
Stalin trichy visit

 

திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ்ச்சங்கம், நகர திமுக வின் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் தி;ருச்சி ஜோசப் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கண் சிகிச்சைக்காக வந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களிலும் பேருந்து நிலையம் முன்பும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, முன்னாள் நகர துணைச்செயலாளர் சரவணன் மற்றும் கலைஞர் தமிச்சங்கத்தினர் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.