கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சிகள்
திருச்சி, அக். 2 திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சிகள் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:-
காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாயனூர் ஊராட்சி மன்ற தலைவி தேவி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் இதே போல் அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி கொடியரசு தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தங்கள் ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து . கூட்டத்திற்கு வந்த மணிகண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இம்மானுவேல் அகஸ்டின் தேவனேசன் ஆகியோரை முற்றுகையிட்டு தங்கள் ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்தால் 100 நாள் வேலை, விவசாயம் உள்பட எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இவ்விரண்டு ஊராட்சிகளிலும் கிராம சபை புறக்கணித்ததால் சோமரசம் பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் தாயனூர் அதவத்தூர் கிராமங்களில் குவிக்கப்பட்டனர் இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.