ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு
திருச்சி, மார்ச் 8 தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் க.செல்வராஜ்(திருப்பூர் தெற்கு), அர்ஜூணன் (திண்டிவனம்), சின்னப்பா (அரியலூர்) தேவராஜி (ஜோலார்பேட்டை) மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 350 கோடி மதிப்பீட்டில அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெறும் வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி(ஸ்ரீரங்கம்), ஸ்டாலின்குமார்(துறையூர்), மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
			