சாலை விபத்தில் இளைஞர் பலி

0 492
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள கவுத்தரச நல்லூரில் மோட்டார் பைக்கில் வந்த இளைஞர் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடந்து சென்றவர் படுகாயம் அடைந்தார்.

லால்குடி அருகே வாளாடி கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன்.இவரது மகன் 22 வயதான நிஷாந்த். இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு கல்லணை வழியாக வாளாடியில் உள்ள வீட்டிற்க்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கவுத்தரசநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான பாரதி இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதமாக பாரதி மீது மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் பைக்கில் வந்த நிஷாந்த் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடந்து சென்ற பாரதி படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிஷாந்த் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயப்பட்ட பாரதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.