அரசு பேருந்திற்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதி
திருச்சி, ஆக.20 திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து துறையூருக்கு சென்ற பேருந்து புலிவலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது கன மழை பெய்ய ஆரம்பித்தது அப்போது பேருந்து முழுவதும் மழைநீர் ஒழுகியது. அங்கு பயணித்த பயணிகள் அனைவரும் அவதியுற்றார்கள் தலைக்கு மேல் இருந்து ஒவ்வொரு இடத்திலும் தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்தது பஸ்ஸில் எரியும் மின்விளக்குகள் இருந்தும் தண்ணீர் தாரா தாரையாக ஊற்றியது. இதனால் பேருந்திற்குள் மழை பெய்தால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டார்கள்.
துறையூர் கிளை போக்குவரத்து பணிமனையில் உள்ள பல பேருந்துகள் இதே நிலையில் தான் உள்ளது ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுதும் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் பேருந்துகளில் இதே போன்று நிகழ்வு வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. ஆனால் துறையூரில் உள்ள கிளை பணிமனை பேருந்துகள் அரிதாகவே புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. துறையூரில் இயக்கப்பட்டு பேருந்துகள் அனைத்தும் மாற்றி புதிய பேருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பேருந்துக்குள் மழை நீர் ஒழுகும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.