துறையூரில் கலைஞர் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம்
திருச்சி, ஆக. 7 திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பாலக்கரையில் தொடங்கிய ஊர்வலம் பெரிய கடை வீதி திருச்சி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நகர செயலாளர் முரளி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், நகராட்சி சேர்மன் செல்வராணிமலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.