பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, மே 22 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1349 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாளை (23/05/2024) காலை 10 மணிக்கு, மாநகர செயலாளர் மு.மதிவாணன் அவர்களின் தலைமையிலும், எஸ். இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., கே. என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா, துணை மேயர் திவ்யா முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக கழகச் செயலாளர் – நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.