காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை

0 441
Stalin trichy visit

திருச்சி, மே 22  திருவெறும்பூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஊர்க்காவல் படை வீரர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் திலகர் ( 24 ) இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருவதோடு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கரூர் திருமகூடனூரைச் சேர்ந்த இளங்கோ மகள் நேஜா (23 )என்பவரை காதலித்து ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேஜாவிற்கு குழந்தை இல்லை இதனால் நேஜாவிற்கும் திலகர் தாய்க்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகவும் . இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் கோபித்துக் கொண்டு நேஜா தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திலகர் நேஜாவை சமரசம் செய்து வீட்டிற்கு கூட்டி வர சென்றதாகவும் ஆனால் நேஜா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திலகர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும் இந்த நிலையில் நேற்று முன்தினம் நேஜாவின் தாய் அந்த பகுதியில்உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்க சென்று விட்டதாகவும் அந்த சமயத்தில் மனம் உடைந்து இருந்த திலகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பால்குடம் எடுத்துவிட்டு மதியம் அவரது தாய் மற்றும் தம்பி வந்து பார்த்தபொழுது திலகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கல போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலகரின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.