திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் ஜாக்டோ ஜியோ – டிட்டோஜாக் நிர்வாகிகள் கோரிக்கை மனு

0 432
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமனிடம் , ஜாக்டோ ஜியோ & டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின்  மாநில பொருளாளருமான நீலகண்டன்
தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிமாநில துணை பொது செயலாளர்  நாகராஜன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் இயங்கக் கூடிய பல்வேறு ஆசிரியர் பணியாளர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈவுத்தொகை வழங்குவது வழக்கம். ஆனால் பல்வேறு ஆசிரியர் சிக்கன நாணய சங்கங்கள் தணிக்கை செய்யவில்லை என்ற காரணத்தால் பங்கு ஈவுத்தொகை வழங்கவில்லை. இதனை  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  அனுப்பிய உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிவாரணமாக 70% வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட இணைப்பதிவாளர் சுற்றறிக்கையினை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் உடனடியாக உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு இணை பதிவாளர் பதிவாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளரும், திருச்சி நகர செயலாளர்  பெர்ஜி ராஜன்
மாவட்ட துணை தலைவர்  ஐசக் டேவிட் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்றைய சந்திப்பின்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர்   பாலகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர் தேவனேசன், மோகன்தாஸ்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைச் செயலாளர்  சுரேஷ்ராஜ் மருங்காபுரி வட்டார துணைத் தலைவர் இளங்கோ மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்  சுமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.