காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்புத் துறை காவலர்கள் ஆகியோருக்கான எழுத்துத் தேர்வு திருச்சி மாநகர் மற்றும் புறநகர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மேற்பார்வையில் காலை 5.30 மணி முதல் சான்றிதழ் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல் உடற்தகுதித் தேர்வு ஆகியவற்றை நடைபெறுகின்றன.
இந்த தேர்வுக்கு வரும் தேர்வர்கள் கீழ்கண்ட ஆவணங்களை தவறாமல் எடுத்து வர வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் அழைப்பானை கடிதம், பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். சான்றிதழ், விளையாட்டு வீரராக இருப்பின் படிவம் சான்றிதழ், தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ், விதவையாக இருப்பின் விதவைச் சான்று, முன்னாள் படை வீரர் சான்று மற்றும் இரண்டு புகைப்படம், இந்த அனைத்து ஆவணங்களுக்கும் அசல் மற்றும் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழையும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8