திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் 7 மாவட்டங்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

0 462
Stalin trichy visit

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்போதைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில் நடந்தது.

இதில் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமை கொரடா கோவை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், அப்துல் சமத் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.