முசிறி நகராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி
திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முசிறி நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை வகித்தார். முசிறி நகராட்சி ஆணையர் சண்முகம் பனை விதைகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார். பொறியாளர் சம்பத்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் முன்னிலை வகித்தனர். அப்போது இயற்கை ஆர்வலர் லோகு பனை மரத்தின் சிறப்புகள் குறித்தும் பனை மரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து முசிறி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் பனை விதை நடவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியாக ஆயிரம் பண விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் பனை விதை ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.