தா.பேட்டை சிவாலயத்தில் சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம்

0 132
Stalin trichy visit

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி , தொட்டியம் , தா.பேட்டை சிவாலயத்தில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜைக்கு பின்னர் அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதம் சோம வாரத்தை முன்னிட்டுமுசிறி சந்திரமவுலீஸ்வரர், தொட்டியம் அனலாட்டிஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜை யாக வேள்வி நடைபெற்றது அப்போது விவசாயம் செழிக்கவும்,பருவ மழை பாதிப்பின்றி பெய்திடவும்,மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் சிறப்பு பூஜைகள், யாக வேள்வி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பூஜையின் போது சங்கில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த  புனித நீர் கொண்டு மூலவர் தெய்வங்களுக்கு
சங்காபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.