தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது

0 14
Stalin trichy visit

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாகாது எனத் தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னதாக மே 8-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசு அமைவதில் நீடிக்கும் இழுபறி காரணமாகத் தேர்வு முடிவுகள் தள்ளிப் போகிறது. பொதுவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசின் (முதலமைச்சர் அல்லது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) அனுமதி அவசியம்.

தற்போது தற்காலிக அரசு அல்லது ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வருவதால், புதிய அரசு பதவியேற்ற பின்னரே முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் பெறப்பட்ட தகவலின்படி, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மற்றும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் ஏற்கனவே முழுமையாக முடிவடைந்துவிட்டன. புதிய முதலமைச்சர் பதவியேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அநேகமாக மே மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.