கோர்ட்டு கேஸா மாத்தி விடுங்க மேடம்… உங்கள என்ன கவனிக்கனுமோ கவனிச்சுக்கிறேன் என 3 ஸ்டார் வைத்த திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் தம்பி ஏமாந்ததில் தொடர்கிறது கதை!
திருச்சி மாவட்டம் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவரில் ஒருவர், சில நாட்களுக்கு முன்பாக திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில், நிலப் பிரச்சினை தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை 3 ஸ்டார் வைத்த போலீஸ் அதிகாரி விசாரித்துள்ளார்.
அப்போது நில பிரச்சினையில் எதிர் தரப்பான அவருடைய தம்பியும் திருச்சி தனியார் பஸ் ஓனரின் மருமகனுமான அவரை, விசாரணைக்கு கூப்பிட்டு அழைத்து பேசியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி.
“என்னப்பா உங்க அண்ணன் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காப்ல… மேடம் கேஸ் எல்லாம் வேண்டாம் உங்கள என்ன கவனிக்கனுமோ கவனிச்சிக்கிறேன் என இருவருக்கும் அண்டர் ஸ்டாண்டிங் உருவாகிறது…
சரிப்பா… நான் கேஸ சிவில் கோர்ட்டுக்கு மாத்தி தரேன்.நீங்க அங்க பாத்துக்கங்க… இதுக்கு ஒரு 2 லட்ச ரூபாய் செலவாகும். அதெல்லாம் பார்த்துக்கலாம் மேடம். நீங்க அங்க மாத்துங்க னு தம்பி சொல்லிட்டு கிளம்ப…
3 ஸ்டார் வைத்த போலீஸ் அதிகாரி பணத்தை வாங்கிட்டு கேஸ மாத்திருக்காங்க…
இந்த விஷயம் கேஸ் கொடுத்த அண்ணன் தம்பி இரண்டு பேரோட மனைவிங்க காதுக்கு வருது. இவங்க ரெண்டு பேரும்… “என்னடி இது! நிலம் ஒன்னும் எனக்கு வரும், இல்லனா உனக்கு போகணும்… எவளோ ஒருத்தி இரண்டு லட்சத்தை போட்டுட்டு போயிட்டா. இவங்கள வச்சுட்டு எப்படி குடும்பத்தை நடத்துறது….
என இவங்க குள்ள ஒரு பூகபம் வெடிக்க…
அந்த 3 ஸ்டார் போலீஸ் அதிகாரி 2 லட்சத்தை வாங்கிட்டு நகர…
இடையில மாட்டுன அண்ணன் தம்பி அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சுகிட்டு இருக்காங்களாம்.