திருச்சி அரசு மருத்துவமனை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கைது

0 167
Stalin trichy visit

திருச்சி மார்ச் 7 திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 28) இவருடைய நண்பர் அஜித் என்பவருக்கும், வாலிபர்கள சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் காரணமாக சண்டை நடந்து அந்த சம்பத்தில் காயம் ஏற்பட்டு அஜித் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அஜித்தை லோகநாதன் கடந்த 6ந்தேதி பார்ப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.பிறகு அஜித்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு அரசு மருத்துவமனை அருகே வெளியே வந்த பொழுது ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து மோசமான வார்த்தைகள் திட்டி அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த லோகநாதன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள்.
விசாரணையில் லோகநாதன், அஜித்திடம் தகராறில் ஈடுபட்ட கும்பல் தாக்கி விட்டனர் என தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ( வயது 23 )வடக்கு தாராநல்லூரை சேர்ந்த ஜெயக்குமார், பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்த சரத்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு பெயரை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி அரசு மருத்துவமனை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது

Leave A Reply

Your email address will not be published.