தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
திருச்சி, ஜன.5 திருச்சி அருகே தனியார் கல்லூரி மூன்றாவது மாடியிலிருந்து முதலாம் ஆண்டு மாணவன் தற்க்கொலை முயற்சி – போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ராமகிருஷ்ணா கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கும்பகோணத்தை சேர்ந்த அபினாஷ் என்ற மாணவன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் . இவர் கடந்த 31ம் தேதி சக நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது ..
கொண்டாட்டத்தின் போது கல்லூரி வளாகத்தில் கண்ணாடி கதவு உடைந்ததாக தெரிகிறது இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொண்டதில் அபினாஷ் மீது புகார் தெரிவிக்கப்பட்டு அபினாஷீன் தாய் தந்தை இருவரையும் நேரில் அழைத்து வருமாறு தெரிவித்ததால் அபினாஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவினாஷ் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அபினாஷ் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்
அபினாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராமகிருஷ்ணா கல்லூரியில் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கல்லூரி கதவினை உடைத்ததாக கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தியதில் அபினாஷ் தனது தாய் தந்தையை அலைபேசியில் வரவழைக்க கூறியுள்ளனர். இதனால் அபினாஷ் கல்லூரி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார் இதில் தலை மற்றும் கால் பகுதியில் அதிகம் அடிபட்டுள்ளதால் சமயபுரம் அருகே உள்ள எஸ் ஆர் எம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள கே எம் சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.