திருச்சியில் 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

0 663
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவங்கி நடைபெற உள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு வாய்ப்புகளை வழங்க உள்ளன.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ் நகல், சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.