ஸ்ரீரங்கம் கோவிலில் 95.79 லட்சம் உண்டியல் காணிக்கை!
108 வைணவ தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கருட மண்டபம் பகுதியில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையிலும், கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி , புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் நா.சுரேஷ் மேற்பார்வையிலும் மாதாந்திர உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதில் 95 லட்சத்து 79 ஆயிரத்து 559 ரூபாய் ரொக்கமும், 271 கிராம் தங்கமும், 1233 கிராம் வெள்ளியும், 78 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்