சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அடங்கிய பிரச்சார ஊர்தி
உழவர் மையத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அடங்கிய பிரச்சார ஊர்தியை வேளாண்மை துணை இயக்குநர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரி்ல் உள்ள உழவர் மையத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அடங்கிய பிரச்சார ஊர்தியை வேளாண்மை துணை இயக்குநர் தொடங்கி வைத்தார்.
மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அடங்கிய பிரச்சார ஊர்தியை மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குநர் சாந்தி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, வேளாண்மை துணை அலுவலர் சின்னபாண்டி, மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன் பாஸ்கர் பாபு ஆனந்த் பன்னீர்செல்வம் கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.