திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகை போராட்டம் : விவசாயிகள் கைது

0 116
Stalin trichy visit

திருச்சி, ஜன.6  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுகட்டாக கைது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் விலை பொருட்களுக்கு லாபகரமான விலையை தர வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி ஆற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இன்று திருச்சி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்து கோரிக்கை அளிக்க இருந்தோம். ஆனால் திருச்சி மாநகர கண்ட்டோன்மென்ட் உதவி ஆணையர் எங்களை அமித்ஷாவை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டார்.இதன் காரணமாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு அளித்த பேட்டியில்..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவிடாமல் காவல்துறையினர் எங்களை தடுத்து விட்டனர். திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் காவல்துறையினரை வைத்து எங்களை தடுத்துவிட்டார். ஆளும் திமுக அரசுக்கு கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என காவல்துறையினர் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். திமுக அரசு தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக விவசாயிகளை கைது செய்து, விவசாயிகள் வாக்கை திமுக பெறவிடாமல் காவல்துறை தடுக்கும் முயற்சியாக இதை பார்க்கிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.