வையம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு 125 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

0 28
Stalin trichy visit

திருச்சி, அக்.13 மணப்பாறை அருகே வையம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு விபிஜி ராம்ஜி திட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம்.

விபிஜி ராம்ஜி திட்டத்தில் முறையாக வேலை வழங்க வேண்டும். செய்த வேலைக்கு நிலுவையின்றி முறையான சம்பளம் வழங்க வேண்டும். வேலையில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஐ எம்எல் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வையம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு முறையாக வேலை மற்றும் ஊதியம் வழங்க கோரியும், முறைகேடு நடப்பதை தடுக்க கோரிக்கை விடுத்தும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜஸ்டன்ஜோ விடம், ஒவ்வொரு பகுதியிலும் பணிதல பொறுப்பாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து முறைகேடாக பணம் வசூல் செய்வதாகவும், பணம் கொடுக்க மறுத்தால் வேலை வழங்க முடியாது எனவும் கூறி மிரட்டுவதாகவும், குற்றஞ்சாட்டினர்.

மேலும் முறையான வேலையும், வேலை செய்த நாட்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் வையம்பட்டி பகுதி மிகவும் பின்தங்கிய ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் 100 நாள் வேலையை நம்பித்தான் பலரும் உள்ளனர். இந்த ஆண்டில் ஒரு வாரம் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. தற்பொழுது 100 நாள் திட்டம் வி பி ஜி ராம்ஜி என்ற திட்டமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற நூறுநாள் திட்டத்தின்படி வேலை செய்ததற்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து வழங்க வேண்டும். தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும் எச்சரித்தனர்

இந்த போராட்டத்தில் நகர செயலாளர் P. பாலு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள்  கருப்பையா, தங்கராஜ்,  இளையராஜா, ஜோதிபாசு மற்றும் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்

Leave A Reply

Your email address will not be published.