வெறிநோய் தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம். துறையூரில் ஆர்.கே.வி.ஒய்- ஆர்.ஏ.எப்.டி.ஏ.ஏ.ஆர்
திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் 10.2.23 அன்று துறையூர் ஒன்றியம் சித்திரப்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட
விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திட்ட அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண குமார் மற்றும் மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி இராமராஜூ ஆகியோர் தொடங்கி கொடி அசைத்து துவக்கி வைத்தனர் . ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற பேரணி திருச்சி ரோடு வழியாக உழவர் சந்தை அருகே சென்றடைந்தது.
பேரணியில் மாணவர்கள் காப்போம் காப்போம்! மனிதர்களை காப்போம்!! நேசிப்போம்! நேசிப்போம் விலங்குகளை நேசிப்போம் !! மேலும் ஒழிப்போம்!! ஒழிப்போம் வெறி நோய்!!! ஒழிப்போம்
போன்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை சாமிக்கண்ணு, கால்நடை மருத்துவர்கள் செந்தில்குமார், மருத்துவர் தமிழரசி, மருத்துவர் கனகராஜூ , சுந்தரபாண்டியன் ஆனந்தராஜூ சரவணன் தர்மராஜ் அமுதலெட்சுமி சஞ்சீவி குமார், வித்யா சாந்தி,மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்