திருச்சி அருகே சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்பதால் வீட்டுக்குள் புகுந்த மழைநீர் – வேதனையில் மக்கள்

0 381
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் சாலை விரிவாக்க பணிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்பதால் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேதனையில் மூழ்கும் மக்கள்.

திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்லையில் கோவண்டா குறிச்சி காமராஜபுரத்தில் வசிப்பவர் அந்தோனி ஜார்ஜ். நேற்று பெய்த மழையில் இவரது வீட்டில் மழை நீர் புகுந்தது வீட்டில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மூழ்கி மூழ்கி நாசமானது. சாலை விரிவாக்கப் பணிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்பதால் நேற்று பெய்த மழை நீர் வீட்டிற்குள் புகுந்து.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் மேலும் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.