கனரக வாகன ஓட்டுனருக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த முதல்வருக்கு கோரிக்கை
திருச்சி மே 16 கனரக வாகன ஓட்டுனருக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தி தரவேண்டும் – தமிழக முதல்வருக்கு கனரக வாகன ஓட்டுநர் நல கூட்டமைப்பு கோரிக்கை
இந்தியா கனரக வாகன ஓட்டுனர் நல கூட்டமைப்பின் அனைத்து நிர்வாகிகள் கூட்டம் திருச்சி பழைய மத்திய அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் முத்தமிழ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய செயலாளர் முத்துக்குமாரசாமி மாநில தலைவர் பத்மநாபன், மாநில செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சந்தோஷ்குமார் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டி அளித்த தேசிய செயலாளர் முத்துக்குமாரசாமி
கனரக வாக ஓட்டுநர்கள் இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.
அவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென்று தற்பொழுது அமைத்திருக்கும் தமிழக அரசு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு என தனி நல வாரியம் ஏற்படுத்தி தர வேண்டும், மேலும் அவர்களுக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.