சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்சி, ஜன.10 மணப்பாறை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் வருடம் தோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் வருடம் தோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு 36 வது சாலை பாதுகாப்பு மாதம் விழாவாக இன்று திட்ட மேலாளர் செந்தில்குமரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விழாவை டீம் லீடர் குருசாமி வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி துவக்கி வைத்தார் பின்னர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சியுடன் ஹெல்மட்டை வாங்கி அணிந்து கொண்டு சென்றனர், இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுங்கச்சாவடி மேலாளர் செந்தில் குமரன் நன்றி தெரிவித்தார்.