சாலை விரிவாக்க பணி : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி, நவ. 20 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலை என இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தினை திரும்ப கட்டுதல் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார். மாநகராட்சி ஆணையர் .வைத்திநாதன், மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் 13.70 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட உள்ள பறவைகள் பூங்காவிற்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் –
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு :
திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும். உயர் மட்ட பாலம் அமைக்கலாம் என்று திட்டம் வகுத்தபோது ஏதும் இடையூரு இருக்க கூடாது என்பதால் தான் மெட்ரோ குறுக்கிட்டார்கள் – தற்போது மெட்ரோ நிர்வாகம் அதற்கான தடையில்லா சான்றை வழங்கி விட்டது. மேரிஸ் மேம்பாலத்தை பொறுத்த வரை ரயில்வே துறையின் பங்கும் இருப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும். பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார்,உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார். தொடர்ந்து, சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ? சப்ஜக்ட் இன் கோர்ட் என்று கடந்து சென்றார்