திருநங்கையை கொலை செய்த இன்ஸ்டா காதலன் கைது
திருச்சி, நவ. 21 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட. கொள்ளிடம் ஆற்றங்கரையில் இன்ஸ்டாகிராமில் திருநங்கையை காதலித்த கூலித் தொழிலாளி,பணத்தை வாங்கிக் கொண்டு பல ஆண்களுடன் இன்ஸ்டாகிராம் தொடர்பில் இருந்த காதலி திருநங்கை ஏமாற்றிய ஆத்திரத்தில் கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த திருநங்கையான மணிகண்டன் என்கின்ற மணிமேகலை.இவர் கடந்த 8 மாத்த்திற்கு முன்பு மண்ணச்சநல்லூரில் உள்ள மேல காவல்கார தெருவில் வசித்து வந்துள்ளார். அதேபோல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ்(25). கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருநங்கையான மணிமேகலையுடன் instagram மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். நாளடைவில் மணிமேகலை ரமேஷ் இருவரும் காதலித்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருநங்கையான மணிமேகலை ரமேஷிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிய கூறப்படுகிறது. மேலும் கூலித் தொழிலான ரமேஷ் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவோம் என்ற நம்பிக்கையில் பணத்தை அவரிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமேஷ் திருநங்கையின் செல்போனை அவருக்கு தெரியாமல் பார்த்த போது பல ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தெரிய வந்தது அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தன்னிடம் வாங்கிய பணத்தை கொடு என திருநங்கை மணிமேகலையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தர மறுத்துள்ளார். மேலும் திருநங்கையான மணிமேகலை 8 மாதத்திற்கு முன்பு மண்ணச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
திருநங்கை மணிமேகலையை ரமேஷ் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் வேறொரு நம்பரில் இருந்து திருநங்கையான மணிமேகலை தொடர்பு கொண்டு எனக்கு பணம் வேண்டாம் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறியுள்ளார். அதற்கு திருநங்கை மணிமேகலை சம்மதம் தெரிவித்து நான் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளேன், அங்கே வாருங்கள் என அழைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு திருநங்கையான மணிமேகலை நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் திருநங்கை மணிமேகலையும் காதலன் ரமேஷ் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது காதலன் ரமேஷ் திருநங்கையிடம் மற்ற ஆண் நண்பர்களிடம் உள்ள தொடர்பை துண்டிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது ரமேஷ் தான் கொடுத்த பணத்தை எப்போது தருவாய் என கேட்டுள்ளார் அதற்கு என்னால் பணம் தர முடியாது என திருநங்கை மணிமேகலை கூறியதாக கூறப்படுகிறது . இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சராமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொலைக்கு பயன்படுத்திய கத்தி சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி, கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் மிதுன்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே மறைந்திருந்த ரமேஷை தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய திருநங்கையின் காதல் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது.