உழைப்பாளர் நலக்கூடம் காணொளி காட்சியில் திறப்பு : கட்டுமான தொழிலாளர்களுக்கு மேயர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

0 125
Stalin trichy visit

திருச்சி, மார்ச்.4  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து  மேயர் மு. அன்பழகன் , திருச்சிராப்பள்ளி தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் , கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் உள்ள சிறப்பு காவல் பட்டாலியன் கேட் 1எதிர்ப்புறம் கட்டப்பட்ட உழைப்பாளர் நலக்கூடத்தை திறந்து வைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 4ல் கட்டுமானத் தொழிலாளார்கள் தினந்தோறும் கட்டுமானப் பணிக்கு செல்வதற்காக காலை நேரத்தில் அதிக அளவில் கூடி காத்திருக்கும் இடங்களில் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 இலட்சம் ரூபாயில் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

அதன்படி உழைப்பாளர் நலக்கூடம் நிறுவப்பட்டு  தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினால் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக 04.03.2026 இன்று திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு இடங்களான சிறப்புகாவல் பட்டாலியன் கேட் 1 எதிர்புறமும் மற்றும் பொன்னகர் பகுதியிலும் உழைப்பாளர் நலக்கூடம்  ஆகிய இடங்களில்  மேயர் மு.அன்பழகன்  திறந்துவைத்து
பதிவு பெற்ற 9,791 தொழிலாளர்களுக்கு ரூபாய் 1 கோடியே 89 இலட்சத்து 17 ஆயிரத்து 800க்கு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருச்சி, தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி , தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) வெ.தங்கராசு , தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள். முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலக பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.