லால்குடி அருகே உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூபாய் 1.60 லட்சம் பறிமுதல்
திருச்சி, மார்ச் 23 லால்குடி அருகே உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூபாய் 1.60 லட்சம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திருச்சி மாவட்ட எல்லையும் தஞ்சாவூர் மாவட்ட எல்லையும் இணைக்கும் பகுதியான செங்கரையூர் அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் உமா மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சாணூரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன் என்பவரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 1.60 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் லால்குடி அருகே பூவாளூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு சனிக்கிழமை தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணம் கொண்டுச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொண்டுச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதரிடம் ஒப்படைந்ததனர்.
இதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர், அவற்றை உரிய முறையில் சீல் வைத்து வழங்கிய பின் கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..