சி.பி.ஐ. திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக திருவெறும்பூர் செ.ராஜ்குமார் தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக
திருவெறும்பூர் செ.ராஜ்குமார் தேர்வு
திருவெறும்பூர் ஆக 29
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய புறநகர் மாவட்டக்குழு கூட்டம் திருச்சியில் ஆர்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.43 மாவட்டக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மாநிலக்குழுவிலிருந்து வழிநடத்தும் குழுவாக
கே.சந்தானம்,முன்னாள் எம்எல்ஏ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் த.இந்திரஜித் நாளை 30-ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் பற்றியும் மாவட்டம் முழுமையும் எழுச்சியுடன் போராட்டம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் விளக்கி பேசினார்.
கூட்டத்தின் முடிவில் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு நடைபெற்றது.புதிய மாவட்டச் செயலாளராக திருவெறும்பூர் செ.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மாநிலக்குழு உறுப்பினர்களும், மாவட்டக்குழு உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்
செ.ராஜ்குமார் 2011-2016 ல் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர்.
தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் தாலுக்காக்குழு செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் மாவட்டச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்குமாருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், பொது நல ஆர்வலர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.