சமயபுரம் சித்திரைத் தேர் திருவிழா உள்ளூர் விடுமுறை
திருச்சி, ஏப்.9 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் ‘சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும் ஏப்.15 அன்று உள்ளுர் விடுமுறை தினமாக அறிவித்தும், மேற்படி விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மே 3 அன்று அரசு வேலை நாளாகவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.