திருச்சி, ஏப்.9 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38) திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தா என்கிற வெற்றிவேல் (வயது21) கட்டிட தொழிலாளிகளான இவர்கள் இரண்டு பேரும் பஞ்சப்பூர் பகுதியில் நடைபெறும் டைடல் பார்க் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
நண்பர்களான இவர்கள் இரண்டு பேரும் இன்று திருச்சியில் இருந்து பணியிடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இன்று மதியம் 12 மணி அளவில்
எடமலைப்பட்டி புதூர் புதிய சோதனை சாவடி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மோகன் நந்தா ஆகிய இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக அதே இடத்தில் இறந்து
விட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.