சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 83.03 லட்சம் உண்டியல் காணிக்கை
சக்தி திருக்கோயில்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலில் தரிசனம் செய்யும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக பணமாகவும், தங்கம், வெள்ளிப் பொருள்களாகவும் காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தி வருகின்றனா்.
நேற்று கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில்…கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில், உதவி ஆணையா்கள் மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் டி. விஜயராணி, நாமக்கல் நரசிம்மசுவாமி திருக்கோயில் பெ.ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை மண்ணச்சநல்லூா் ஆய்வா் த. பிருந்தாநாயகி முன்னிலையில், திருக்கோயில் பணியாளா்கள், சமயபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா்கள்,
பொதுமக்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். திறக்கப்பட்ட 34 உண்டியல்களிலிருந்து ரூ.83, 03,237 ரொக்கம், 2,930 கிராம் தங்கம், 2,360 கிராம் வெள்ளி, 74 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது