உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

0 233
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 6 திருச்சி மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5)  முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் மண்டல கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.
நடைபெற்றது. இவ்விழாவில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன . விழாவை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் கணபதிமாறன், திருச்சி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் மும்மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோட்ட கால்நடை உதவி இயக்குனர் கணபதி பிரசாத், லால்குடி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் சந்துரு ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இவ்விழாவில் திருச்சி, ஸ்ரீரங்கம்,லால்குடி கோட்டம் கால்நடை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.