உப்பாறு பாலக்கட்டையின் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருச்சி, ஜூன் 6 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாறு பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குளத்திரரான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் (44). அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர்குமார் (51) , இவர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்து வருகின்றனர். கடந்த 4 ம் தேதி இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.மோட்டார் பைக்கை குமார் ஒட்டியுள்ளார். இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள உப்பாறு பாலத்தின் தடுப்புச் சுவர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி விபத்துக்குளானது. இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயமடைந்தனர்.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.