மதச்சார்ப்பற்ற சிவில் சட்டம் தேவையற்றது : ம.ம. க. தலைவர் ஜவாஹிருல்லா
திருச்சி, ஆக.19 மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA சிறப்புரை ஆற்றினார்
இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமை தாங்கினார்.இளைஞர் அணியின் மாநில பொருளாளர் நெல்லை ரியாஸ் வரவேற்பு உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா:
டிசம்பர் இறுதிக்குள் இளைஞர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 இடங்களில் இருசக்கர பேரணி நடத்த உள்ளோம். 10 லட்சம் இளைஞரகளை சந்தித்து போதை எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்
சுதந்திர தினத்தில் கொடி ஏற்றிவிட்டு மோடி ஆற்றிய உரை அரசியல் அமைப்பு தந்துள்ள உரிமைகளுக்கு எதிராக வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வாகையில் அமைந்து உள்ளது. வகுப்புவாத சிவில் சட்டங்களை எதிர்ப்பதாக மோடி கூறுகிறார் மத சார்பற்ற சிவில் சட்டங்களை கொண்டு வருவதாக மோடி கூறுகிறார்
நாடு முழுவதும் உள்ள 9.4 லட்சம் ஏக்கர் வக்ஃப்பு நிலங்களை அபகரிக்க வக்ஃப்பு திட்டதை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் இந்நிலையில் இந்தியா கூட்டணி கண்டனம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் , LJP ஆட்சோபனை கார்ணமாக வபு திருத்த சட்டம் கூட்டு நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மத தனியார் சட்டங்களை இலக்கு வைத்து தான் அவர் ஆற்றிய உரை உள்ளது. இது பிரதமர் உரையாக தெரியவில்லை அரசியல் கட்சி தலைவர் உரை போல் உள்ளது,
அரசியல் அமைப்பு சட்டம் 25 படி இந்திய குடி மக்களுக்கு எந்த மதத்தை பின்பற்ற பிறருக்கு எடுத்துரைக்க உரிமை உள்ளது
அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மோடி உரை உள்ளது இதனை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம்
தமிழ் வெல்க என்ற கலைஞர் சொந்த கையெழுத்தில் , 50 ஆண்டு காலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரும் தலைவராக சமூக நீதியை நிலை நாட்டிய தலைவராக , விளிம்பு நிலை மக்களி தூக்கி விட்ட தலைவருக்கு
100 ரூபாய் நாணயம் முதல்வர் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு வெளியிட சம்மதித்து இருபது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்றார்
தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் ஒரு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளார் பத்தாண்டுகள் அதிமுக அரசின் ஒப்பீடின் படி திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறைவு
அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு சீர்குலைவு தான் சமீபத்தில் உட்சபட்ச சீர்குலைவு என தெரிவித்தார்
முஸ்லிம்களுக்கன 3.5 இட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்
50 சதவீதத்திற்கும் மேல் மாநில அரசில் இட ஒதுக்கீடு செல்லலாம் என்ற வரம்பு
நீதி மன்ற தீர்ப்பின் வழியாக உடைந்து உள்ளது
எனவே ஒவ்வொரு மாநில அரசும் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்டோர் , பட்டியல் , பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தர வழி பிறந்து உள்ளது எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்
திருமா எந்த சூழ்நிலையில் அந்த கருத்தை சொன்னார் என்பதை எடுத்து கொள்ளாமல் அவர் பேசிய ஒரு கருத்தை எடுத்து கொண்டு தலித் ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது என்பதை பரப்புரை செய்வது தவறு. நிச்சயமாக தமிழ் நாட்டில் தலித் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள் அவரில் ஒருவர் முதல்வர் ஆவதை வரவேற்கிறோம்