சீமானுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் : டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் பேட்டி
திருச்சி, ஆக.5 சீமானுக்கு உறுதியாக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் -திருச்சியில் டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் பேட்டி.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் மூன்றில் புகார் மனுவை டிஐஜி வருண்குமார் கொடுத்து இருந்தார். இந்த புகார் குறித்து திருச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்கு தருமாறு சீமான் தரப்பு வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் இந்த வழக்கு தொடர்பாக சீமான் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்த வழக்கு விசார இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் மூன்றில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்