அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்

0 189
Stalin trichy visit

திருச்சி, அக். 15 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம், கருப்பூர் பகுதிகளில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதாக புத்தாநத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கருப்பூர் தென்புறமுள்ள மந்தை அம்மன் கோவில் அருகே காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை கண்டவுடன் டிராக்டர் மற்றும் டிப்பரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர் . இதனை அடுத்து காவல்துறையினர்ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அப் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது
மணல் அள்ளியது கருப்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மூர்த்தி – 30 என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணல் அள்ளியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.