அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

0 244
Stalin trichy visit

திருச்சி, மார்ச். 1 அரசுப்பள்ளிகளில் 2024 2025 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள்
சேர்க்கை பேரணி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை திருச்சி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்  வெ.பேபி தலைமையில் நடைபெற்றது.

அங்கன்வாடி ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் ஐந்து வயது நிறைவு பெற்ற மாணவர்களை அழைத்து வந்து தொடக்கப் Uள்ளி தலைமை அசிரியரிடம் மாவட்டக் கல்வி அலுவலர் பெற்றோர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர். தற்போது முதலாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மானவர்களை மலர் கொடுத்து கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தி வைத்தனர்.

பேரணியில் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்  மீனா, ,தலைமை ஆசிரியர் சகாயம் மேரி, சந்திரா உதவி ஆசிரியர்கள் மலர்விழியாள், கலைச்செல்வி, லூமின் ஜார்ஜினா, கிருபா, உஷா கீதா ,பெல் சிட்டா மற்றும் அல்லூர் அங்கன்வாடி கைக்குடி அங்கன்வாடி அமைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி நித்தியா, மீனா கீர்த்தனா வார்டு உறுப்பினர்கள் சதீஷ் மற்றும் பெற்றோர்கள் கணேஷ் கண்ணன் கல்வியாளர் மோகன் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்  30 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அரசின் பல்வேறு திட்டங்கள் பதாகைகளாக உயர்த்திப் பிடிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.