மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
திருச்சி,செப்.18 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முதற்கட்டமாக மணப்பாறையில் வாக்கு திருட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்கும் விதத்தில் பொதுமக்களிடம் வாக்கு திருட்டுக்கு எதிராக கையேழுத்து இயக்கம் நடைபெற்றபோது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமதுவிடம் கையெழுத்து பெற்றனர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ரமேஷ் குமார், திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் மிலிட்டரி நா. முருகன், மணப்பாறை வட்டார தலைவர் சத்தியசீலன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்