மதுரை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

0 286
Stalin trichy visit

முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
​
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் திருக்கோவிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வேதா அனுக்ஞை, நவதுர்க்கை ஹோமம், பூர்ணாஹதி, சம்வத்சரா அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உற்சவ மதுரை காளியம்மன் மதுரை வீரன் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் யாகவேள்வியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் கொண்டு சிறப்பு பூஜைகள்
நடந்தது.

​அனைத்துதொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திருச்சி நாமக்கல் கரூர் புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் தொட்டியம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.