திருச்சி தில்லைநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்
திருச்சி, பிப்.7 திருச்சி தில்லைநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்
திருச்சி மாநகர தில்லைநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த செல்வராஜ் என்பவர் நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று 07.01.26 காலை 9:30 மணியளவில் இயற்கை எய்திவிட்டார்.
இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாவது பேட்ச் சேர்ந்தவர். மனைவி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். சொந்த ஊர் கல்லணை அருகே கல்விக்குடி. தற்போது மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். கடந்த சில மாதம் முன்பு காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யபட்ட சம்பவம் இவரது கண் முன்னே காவலர் குடியிருப்பில் நிகழ்ந்தது குறிப்பிடதக்கது.