உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண சிறப்பு முகாம்

0 203
Stalin trichy visit

திருச்சி, அக்.10  முசிறி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கணினி பதிவு, கணினி பெயர் மாற்றம், நில உடமை மேம்பாட்டு திட்டம் பிரிவுகளில் தீர்க்கப்படாத மனுக்கள் அதிக அளவில் வரப்பட்டிருந்தது.

இதனை கவனித்த முசிறி சப் கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இந்த மனுக்களை குறைக்க திட்டமிட்டு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மனுக்களை குறைக்க சிறப்பு முகாம் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் தொட்டியம் , துறையூர், முசிறி வட்டங்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதன்கிழமை முசிறி வட்டம் குறித்து நடைபெற்ற முகாமில் வட்டாட்சியர் லோகநாதன்
மண்டல துணை வட்டாட்சியர்கள் கார்த்திக், தனபாக்கியம், சுந்தரி ,வருவாய் ஆய்வாளர்கள்
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், நில அளவைத் துறை ஊழியர்கள், தங்கள் துறை சார்ந்த கோப்புகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு குடி பெயர்ந்து நீண்ட நாட்கள் தீர்வாகாத மனுக்களுக்கு உரிய மனுதாரர்களை நேரில் வரவழைத்து உரிய ஆவணங்கள் கொண்டு வர செய்து அதனை சரிபார்த்து தீர்வு கண்டனர்.

சுமார் 200 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. தாலுகா அலுவலக ஊழியர்கள் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு மனுக்களை தீர்வுசெய்தது பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. இதேபோல் அனைத்து துறைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் முசிறி சப் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணும் பொருட்டு சிறப்பு முகம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.