தா.பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

0 228
Stalin trichy visit

திருச்சி, அக்.10  திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  காடுவெட்டி தியாகராஜன் வதலைமை வகித்து முகாமினை தொடங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் முசிறி தாசில்தார் லோகநாதன், தா.பேட்டை பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி,
துணைத்தலைவர் மயில்வாகனன் ,மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் , சுகாதாரத்துறை, சமூக நலன், வீட்டுவசதி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர்.

பயனாளிகளுக்கு பட்டா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண் விதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு, நிர்வாகிகள் பிரபாகரன், மகாமணி , ரமேஷ் , பிரபு, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.